ஸ்லிப் இல்லாமல் ஸ்லிப் ஆன இந்தியா.. மேட்சில் நடந்த பெரிய தவறு.. இந்திய அணி தந்த ஷாக்.. நடந்தது என்ன?
சென்னை; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஆடிய விதம் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தொடக்கத்தில் இந்தியா விக்கெட்டை எடுத்தாலும் போக போக சொதப்ப தொடங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் வேகமாக ஆடிய இந்திய அணி அதன்பின் ரன் எடுக்கவும், விக்கெட் எடுக்கவும் முடியாமல் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி அதன்பின் மோசமாக திணறியது.
முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார்.

அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார். எல்பிடபிள் முறையில் ஸ்மித் அவுட் ஆனார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது.. ஸ்மித் அதற்கு ரிவ்யூ எடுக்கவில்லை. அவர் விக்கெட் இல்லை என்றாலும் இன்று ரிவ்யூ எடுக்கவில்லை.
பார்ட்னர்ஷிப்; இதை தொடர்ந்து மேட்சில் தொடர்ந்து ஹெட் மற்றும் லபுசேன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இரண்டு பேரும் 160 ரன்களை எடுத்தனர். இதில் ஹெட் 137 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். இதனால் எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் 241 ரன்கள் எடுத்து வென்றது.
( 2வது ஓவருக்கு முன்.. திடீரென கோலி, ரோஹித்திடம் பேசிய ஷமி.. என்ன நடந்தது? )
என்ன காரணம்?: ஆஸ்திரேலியா அணி இப்படி ஆட முக்கிய காரணம் ஸ்லிப் இல்லை. தொடக்கத்தில் கோலி கொஞ்ச நேரம் ஸ்லிப் இருந்தார். அதன்பின் ஸ்லிப் இல்லை. பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் இருந்த போது லெப்ட் ஹேண்ட் ஜடேஜா, குல்தீப் பவுலிங் போட்ட போது ஸ்லிப் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இன்று ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்கவில்லை. அவரின் இந்த நிலைப்பாடு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் ரோஹித் ஸ்லிப் இல்லாமல் ஆடினார் என்பது கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இந்தியா பேட்டிங்; முன்னதாக தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.
அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.












Click it and Unblock the Notifications