2வது ஓவருக்கு முன்.. திடீரென கோலி, ரோஹித்திடம் பேசிய "ஷமி".. அப்படியே ஆட்டமே மாறிடுச்சே.. குலசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை பைனலில் ரோஹித் சர்மா வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்து உள்ளார்.

2023 உலகக் கோப்பை சீசன் முழுக்க இந்திய அணியில் வீரர்களுக்கு என்று முக்கியமான ரோல் ஒன்று கொடுப்பட்டது. உதாரணமாக ரோஹித் வேகமாக ஆட வேண்டும். கில், ஷ்ரேயாஸ் கொஞ்சம் பொறுமையாக ஆட வேண்டும்., கோலி ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதுதான் பிளான்.

அதேபோல் பவுலிங்கில் பும்ரா - சிராஜ் முதலில் ஓவர் வீசுவார்கள். ஏனென்றால்; பும்ரா - சிராஜ் இருவருமே புதிய பந்தில் சிறப்பாக பவுலிங் செய்வார்கள். அதிலும் சிராஜ் பழைய பந்தில் சரியாக வீச மாட்டார். இதனால் ஷமியை அந்த ஓவர்களுக்காக வைத்துக்கொண்டனர்.

ஷமி புதிய பந்தில் சிறப்பாக பவுலிங் செய்வார் என்றாலும்.. அவரின் அனுபவம் காரணமாக அவர் பழைய பந்துகளையும் நன்றாக பயன்படுத்த முடியும். அதனால் ஷமியை பவர் பிளேவில் பயன்படுத்துவது இல்லை.

What did Shami talk to Kohli and Rohit before second over in India vs Australia 2023 World Cup Finals?

வித்தியாசமான முடிவு; அப்படி இருக்கும் நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை பைனலில் ரோஹித் சர்மா வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்து உள்ளார்.அதன்படி இன்று இரண்டாவது ஓவர் ஷமிக்கு கொடுத்துள்ளார் ரோஹித்.

இதற்கு காரணம் ரோஹித் சர்மா - கோலியிடம் இன்று ஷமி சென்று பேசினார். எனக்கு பவுலிங் கொடுங்கள் என்பது போல ஷமி இவர்களிடம் சென்று பேசினார். அவர் பேசிய சில நிமிடங்களில் அவருக்கு இரண்டாவது ஓவர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதல் பந்திலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். அவர் பவர் பிளேவிற்கு பவுலிங் போட வந்தது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

( இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.. இந்திய அணிக்கு கம்மின்ஸ் பிரஷர் போட்டது எப்படி? பிளானே வேறு)

இந்தியா பேட்டிங்: முன்னதாக தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

What did Shami talk to Kohli and Rohit before second over in India vs Australia 2023 World Cup Finals?

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+