ரூல் இதுதான்! இந்தியா-ஆஸ்திரேலியா பைனல் ‛டை’ ஆனால் என்ன நடக்கும்? வெற்றி எப்படி முடிவு செய்யப்படும்?
சென்னை: 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில் இந்த போட்டி ‛டை’ ஆனால் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை போட்டி நடந்து வந்தது. லீக் போட்டி, அரையிறுதி போட்டிகள் முடிவடைந்தன. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவும் பைனலுக்கு முன்னேறின.

இதையடுத்து இன்று இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் வென்று 3வது முறையாக உலககோப்பையை வெல்ல இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியாவும் 5 முறை சாம்பியனான நிலையில் 6வது முறையாக மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.
தெரியுமா? 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் 4 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது ஏன்? காரணம் இதுதான்
இந்நிலையில் தான் தற்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பைனல் ‛டை’ ஆனால் வெற்றி எப்படி தீர்மானிக்கப்படும்? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். கடந்த 2019 உலககோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் பைனலில் விளையாடியது.
இந்த போட்டியில் இரு அணிகளும் 241 ரன் அடுத்து மேட்ச்சை 'டை'யில் முடித்தன. இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. இதிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து ‛டை' ஆக்கின. இதையடுத்து ஒவ்வொரு அணியும் அடித்த பவுண்டரிகளை கணக்கிட்டு இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வளவு கஷ்டமா? முதல் முதலாக உலககோப்பை கிரிக்கெட்டை இந்தியா நடத்தியது எப்படி தெரியுமா-உதவிய அம்பானி
இந்த அறிவிப்பு என்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய நிலையில் தான் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இறுதி போட்டி ‛டை’ ஆனால் என்ன நடக்கும் என்பதை ஐசிசி தெளிவுப்படுத்தி உள்ளது. அதன்படி ஒருவேளை இந்த போட்டி ‛டை’ ஆனால் பவுண்டரிகள் கணக்கீட்டு வெற்றி தீர்மானிக்கப்படாது.
மாறாக சூப்பர் ஓவர் முறையில் வெற்றி நிர்ணயம் செய்யப்படும். அப்படி சூப்பர் ஓவரும் ‛டை’ ஆனால் அதன்பிறகு இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் ‛டை’ ஆனால் அடுத்ததாக சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஒரு அணி வெற்றி பெறும் வரை அடுத்தடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்படும் என தெளிவுப்படுத்தி உள்ளது.
அதோடு இன்று ஒருவேளை 20 ஓவர் வீசப்படாமல் போட்டிக்கு மத்தியில் மழை குறுக்கிட்டு பாதியில் நிறுத்தப்பட்டால் ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை மீண்டும் போட்டி தொடங்கும். முந்தைய நாள் வீசி கைவிடப்பட்ட ஓவரில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். ஆனால் தற்போதைய சூழலில் அகமபாத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இதனால் ரிசர்வ் டே வரை போட்டி செல்ல வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications