தெரியுமா? 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் 4 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது ஏன்? காரணம் இதுதான்
சென்னை: 50 ஓவர் உலககோப்பை போட்டி ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுவது ஏன்? என்று யோசித்து உள்ளீர்களா? இதன் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 முறை உலககோப்பை தொடர்கள் நடந்துள்ளன. அந்த சமயங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நாடுகளுடன் சேர்ந்து தான் இந்தியா நடத்தி உள்ளது.

ஆனால் இப்போது தான் முதல் முறையாக உலககோப்பை போட்டி முழுவதையும் இந்தியா தனியாக ஏற்று நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கிய உலககோப்பை தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற லீக் ஆட்டத்தின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவும் பைனலுக்கு முன்னேறின. இன்று 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றுடன் முடிவுக்கு வரும் 50 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்ததாக மீண்டும் 2027 ம் ஆண்டில் நடைபெற உள்ளது. அந்த உலககோப்பை தொடரை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் ஏற்று நடத்த உள்ளன. சரி இது இருக்கட்டும். ஏன் 50 ஓவர் உலககோப்பை போட்டி மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என என்றாவது யோசித்து இருக்கீங்களா?. 20 ஓவர் உலககோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில் இதற்கு மட்டும் ஏன் 4 ஆண்டுகள் பிடிக்கிறது?
இந்த கேள்வியை சிலர் யோசித்து இருக்கலாம். பலர் யோசிக்காமல் இருக்கலாம். சரி யோசித்தாலும், யோசிக்காமல் இருந்தாலும் கூட அவர்களுக்கான விடை என்பது இங்கே உள்ளது. அதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
பொதுவாக உலகோப்பை போட்டியில் பங்கேற்க தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த தகுதி சுற்றில் பங்கேற்கும் அணிகளை நடைமுறையை பயன்படுத்தி தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு தகுதி சுற்று போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கான இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை உலககோப்பை தொடர் நடத்தும் நாடு மேற்கொள்ள வேண்டும்.
அதோடு உலககோப்பை தொடர் என்பது சுமார் ஒன்றரை மாதங்கள் (2023 உலககோப்பை அக்டோபர் 5ல் தொடங்கி இன்று முடிவுக்கு வருகிறது)வரை நடக்கும் நீண்ட தொடராகும். குறைந்தபட்சம் 10 அணிகள் விளையாடும் நிலையில் தினமும் போட்டிகள் இருக்கும். இதனால் பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் வந்து செல்வார்கள். அவர்களுக்கு ஏற்ப தங்கும் இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதோடு வீரர்களுக்கான தங்கும் இடம், விஐபிக்களுக்கான தங்கும் இடம், வீரர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி வானிலை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை நல்ல திட்டமிடலுடன் பொறுமையாக சரியான வகையில் மேற்கொள்ள 4 ஆண்டு வரை தேவைப்படுகிறது. இதனால் தான் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications