இவ்வளவு கஷ்டமா? முதல் முதலாக உலககோப்பை கிரிக்கெட்டை இந்தியா நடத்தியது எப்படி தெரியுமா-உதவிய அம்பானி
சென்னை: 50 ஓவர் உலககோப்பை 2023ம் ஆண்டுக்கான இறுதி போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்ததே தற்போதைய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான். சரி திருபாய் அம்பானி எப்படி இந்தியாவுக்கு உலககோப்பை போட்டியை கொண்டு வந்தார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தற்போது உலகில் பெரும் பணம் கொழிக்கும் கிரிக்கெட் போர்டாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் எத்தனை உலககோப்பை போட்டிகளை வேண்டுமானாலும் இந்தியாவில் நடத்த முடியும்.

ஆனால் முன்னொரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது நிதிகள் குவித்து வைத்திருக்கவில்லை. ஏழ்மையான கிரிக்கெட் வாரியமாக தான் இருந்தது. அதாவது ஆடம்பர செலவுகளை தவிர்த்து வீரர்களுக்கு தேவையான செலவை மட்டுமே செய்யும் நிலையில் இருந்தது.
அப்போது கிரிக்கெட்டின் பிறப்பிடம் என கூறப்படும் இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியம் தான் மிகப்பெரியதாக இருந்தது. இதனால் தான் 1983ம் ஆண்டு வரையிலான அனைத்து கிரிக்கெட் உலககோப்பை போட்டிகளும் இங்கிலாந்திலேயே நடந்தன. அதாவது முதல் முதலாக கிரிக்கெட் உலககோப்பை போட்டி என்பது 1975ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு 1979, 1983 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்தது.
இதில் முதல் 2 உலககோப்பைகளை மேற்கிந்திய தீவுகள் வென்ற நிலையில் 1983ம் ஆண்டு நடந்த போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலககோப்பை போட்டியை வென்று அசத்தியது. அதன்பிறகு தான் இந்தியாவில் கிரிக்கெட் மீதான பிரியம் பலருக்கும் அதிகரித்தது. இதையடுத்து 1987 ம் ஆண்டு உலககோப்பை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த உலககோப்பை தொடரையும் இங்கிலாந்து நடத்த முயன்றது. இந்தியாவும் உலககோப்பை தொடரை நடத்த விரும்பியது.
இந்திய அணியால் பூரித்துப்போன சோனியா! பைனலில் வெல்ல வீடியோவில் வாழ்த்து! என்ன சொன்னார் தெரியுமா?
1983ல் இந்தியா உலககோப்பை வென்றதால் இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலமானது. இந்த வேளையில் இந்தியாவில் உலககோப்பை போட்டியை நடத்தினால் அந்த விளையாட்டு இன்னும் பிரபலமாகும் என திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உலககோப்பை தொடரை நடத்த முடிவு செய்தன. இதற்காக இங்கிலாந்தில் உலகோப்பை தொடரை நடத்துவதை விட 5 மடங்கு கூடுதல் பணம் வழங்கி உலககோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது.
இதனால் நிதி நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிக்கியது. ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் நிதியை திரட்ட தொடங்கியது. இருப்பினும் உலககோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான நிதி என்பது கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. இந்த வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கைக்கொடுத்தவர் தான் தற்போதைய இந்திய பெரும்பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி.
இவர் இந்தியாவில் உலககோப்பை போட்டியை நடத்துவதற்கான பெரும் நிதியை வழங்கினார். இதையடுத்து தான் 1987 ல் முதல் முறையாக இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதனால் தான் 1987 ம் ஆண்டு உலககோப்பையை ரிலையன்ஸ் உலககோப்பை என காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
அந்த ஆண்டு உலககோப்பை தொடரை இந்தியா, பாகிஸ்தான் சேர்ந்து நடத்தியது. இந்த தொடரில் இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு சென்றது. அதில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக உலககோப்பையை வென்றது.
1987 ம்ஆண்டை தொடர்ந்து தற்போது 4வது முறையாக இந்தியாவில் உலககோப்பை போட்டி நடக்கிறது. அதாவது 1987 ம் ஆண்டுக்கு பிறகு 1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்தும், அதன்பிறகு 2011ல் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகள் சேர்ந்தும் உலககோப்பை போட்டியை நடத்தின.
தற்போது 2023ல் இந்தியா மட்டுமே உலககோப்பை போட்டியை ஏற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்க உள்ளது. உலககோப்பை 2023ம் ஆண்டு தொடரின் இறுதி போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் இந்தியா வெல்ல வேண்டும் என ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனைகளை செய்ய தொடங்கி உள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications