Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலவருட கனவு.. இந்திய அணியில் முடிவிற்கு வந்த "பயங்கர" பிரச்சனை.. இனிமே அதிரடிதான்.. வந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடக்கத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் அதன்பின் நேபாளம், பாகிஸ்தான், இலங்கை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்தியா பைனல்ஸ் சென்றுள்ளது.

கடைசியாக நடந்த பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பான பேட்டிங், சிறப்பான பவுலிங் என்று இந்திய அணி அசத்தி உள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை பைனல்சுக்கு இந்தியா சென்றுள்ளது.

World cup and Asia cup India: How team India solved the no 4 issue with K L Rahul comeback?

ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் தற்போது கடைசி லீக் ஆட்டம் மற்றும் பைனல்சுக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

முன்னதாக 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார்

அப்போது இந்த அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக சஞ்சு சாம்சன் எடுக்கப்படாதது கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல் சூர்ய குமார் யாதவ் எடுக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது. கே எல் ராகுல் நேரடியாக அணிக்குள் எடுக்கப்பட்டதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில்தான் ஆசிய கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிக்கொண்டு இருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் ஆடி வருகின்றனர்.

இதில் கே. எல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுவதால் 4வது இடத்தில் நிலவி வந்த பிரச்சனை சரியாகி உள்ளது. பல வருடமாக இந்திய அணியில் சரி செய்யப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை மிடில் ஆர்டரில் 4ம் இடத்தில் ஆடும் வீரர் பற்றிய பிரச்சனை. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட யுவராஜ், தோனி போன்றவர்களின் ஓய்விற்கு பின் மொத்தமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பலம் இழந்தது. முக்கியமாக யுவராஜ் சிங் இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி பல வருடமாக திணறி வருகிறது. மிடில் ஆர்டரில் 4 அல்லது 5வது இடத்தில் ஆடுவதற்கு இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது கே எல் ராகுல் பார்ம் காரணமாக மிடில் ஆர்டரில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா தோல்வி அடைய மிடில் ஆர்டர்தான் காரணமாக அமைந்தது. இந்த மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், சூர்யா குமார், மணீஷ் பாண்டே என்று பலரை இந்திய அணி சோதனை செய்து பார்த்துவிட்டது. ஆனாலும் யாரும் பெரிதாக மிடில் ஆர்டரில் ஆடவில்லை.

World cup and Asia cup India: How team India solved the no 4 issue with K L Rahul comeback?

இதுவே இந்திய அணி அந்த தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் தற்போது கே எல் ராகுல் பார்ம் காரணமாக மிடில் ஆர்டரில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை 50 ஓவர் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை உறுதி செய்தது.

15 பேர் கொண்ட இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாத்மி, குல்தீப் யாத்மி. , முகமது சிராஜ் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இப்போது ஆசிய கோப்பை தொடரில் கலக்கும் அதே அணி இந்த உலகக் கோப்பை தொடரிலும் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+