தாங்க முடியாத பிரஷர்! சீன வீரரின் அந்த ஒரு தவறு! சரியாக குகேஷ் செய்த மூவ்- வெற்றிக்கு காரணமே இதுதான்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்து வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்று குகேஷ் புதிய சரித்திரம் படைத்துள்ளார். இன்று நடந்த கடைசி போட்டி டிரா ஆகும் என்றே பலரும் நினைத்த நிலையில், கடைசி நேரத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் எதிரில் களமிறங்கிய டிங் லிரன் ஒரு சிறிய தவறு செய்தார். இதுவே குகேஷ் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ் களமிறங்கினார். அவருக்கு எதிராகச் சீனாவின் டிங் லிரன் போட்டியிட்டார்.

வெற்றி: மொத்தம் 14 சுற்றுகளில் போட்டி நடைபெறும் நிலையில், அதில் யார் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ.. அவர்களே வெற்றியாளராகக் கருதப்படுவார்கள். இதுவரை நடந்த 13 சுற்றுகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளனர். மற்ற போட்டிகள் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருக்கின்றனர்.
இதற்கிடையே இன்று 14வது சுற்றுப் போட்டி நடந்தது. இதில் சீனாவின் டிங் லிரன் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நிலையில், குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் போட்டியிட்டார். இந்த போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் நினைத்தனர். இதுவும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும். அதன் மூலமே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றே பலரும் நினைத்தனர். விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பலரும் போட்டி டிராவில் முடியும் என்றே கூறியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்தது.
அந்த ஒரு தவறு: கடைசிக் கட்டத்தை நெருங்க நெருங்க அழுத்தம் அதிகரித்தது. குகேஷும் தொடர்ந்து முயன்று வந்த நிலையில், 55ஆவது நகரில் அதீத அழுத்தம் காரணமாக டிங் லிரன் ஒரு மேஜர் தவறை செய்தார். அவரது ரூக், அதாவது யானை F4இல் இருந்த நிலையில், அதை F2க்கு நகர்த்தினார். இதுதான் அவர் செய்த ஒரே தவறு.
குகேஷ் அடுத்துச் செய்த மூவ்: இதைப் பட்டென பிடித்துக் கொண்ட குகேஷ் தனது அடுத்தடுத்து காய் நகர்த்தல்களில் டிங் லிரனுக்கு அழுத்தம் கொடுத்தார். பி2ல் இருந்த தனது யானைக் காய் மூலம் லிரனின் யானை காயைத் தூக்கினார். தொடர்ந்து ஜி1ல் இருந்த தனது ராஜா மூலம் குகேஷின் யானையை லிரன் வெட்டினார். அடுத்து குகேஷ் தனது பிஷப் (மந்திரி) காய் மூலம் செக் வைத்தார். அதில் இருந்து தப்ப லிரன் தனது பிஷப் காயை இழக்க வேண்டி இருந்தது.

கடைசியில் லிரனுக்கு ராஜாவும், ஒரு சிப்பாயும் இருந்தது. அதேநேரம் குகேஷுக்கு ராஜாவும், இரண்டு சிப்பாயும் இருந்தது. தொடர்ந்து ஓரிரு நகர்த்தல் மட்டும் இருந்த நிலையில், லிரன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த போட்டியை உலகெங்கும் பலரும் பார்த்து வந்த நிலையில், அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் லிரன் தனது ரூக்கை தவறாக நகர்த்திவிட்டார். அந்த ஒரு நகர்த்தலையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி குகேஷ் சரித்திரம் படைத்தார்.
ஆனந்த் கண்ணீர்: வழக்கமாகப் போட்டியில் வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாகும் குகேஷ் எமேஷ்னல் ஆக மாட்டார். ஆனால், இந்த முறை குகேஷால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வென்றதும் ஆனந்த் கண்ணீர் விட்டார். இந்த வெற்றியின் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications