இதுக்கு முடிவே கிடையாதா?.. ஒரே மாதத்தில் 2-வது முறை.. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை அத்துமீறல்

இலங்கை கடற்படை அத்துமீறல்

தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வலிறுத்தியதன்பேரில் மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்தும் இலங்கை ராணுவத்தினர் திருந்துவதாக தெரியவில்லை. அவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

 ஒரே மாதத்தில் இரண்டாவது முறை

ஒரே மாதத்தில் இரண்டாவது முறை

அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். நமது மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டிய அவர்கள் 10க்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளின் வலைகளை வெட்டி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் அராஜகம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினார்கள்

கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினார்கள்

கடந்த 10-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர். இந்த கோர தாக்குதலால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்தன. இதேபோல் கடந்த மாதம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இதற்கு முடிவே கிடையாதா?

இதற்கு முடிவே கிடையாதா?

மீனவர்கள் உடல் முழுவதும் சானிடைசர் தெளித்து மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டனர் இலங்கை கடற்படையினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கோரிக்கை விடுத்தனர். மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சில நாட்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விடுத்தது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+