இலங்கையிலிருந்து மேலும் 32 தமிழக மீனவர்கள் விடுதலை- இதுவரை 140 பேர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையிலிருந்து மேலும் 32 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் 8 படகுகளையும் விடுவிக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து இதுவரை 140 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 32 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சமீபத்தில்தான் யாழ்ப்பாணத்தில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 32 மீனவர்களும், அவர்களின் படகுகளும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications