இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் விடுதலை- கோர்ட்டுகள் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய 40 தமிழக மீனவர்கள் இன்று அந்நாட்டு நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கடந்த ஜூன் 1-ந் தேதியன்று இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் ஜூன் 20-ந் தேதியன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. தற்போது இந்த 40 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்ப உள்ளனர்.












Click it and Unblock the Notifications