இலங்கையில் கொட்டித் தீர்க்கும் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் மத்தியப் பகுதிகளில் தொடர்மழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரு குழந்தைகள் உள்பட ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகின்றது. தலைநகர் கொழும்புவின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகின்றது. பல பகுதிகளில் மழை, வெள்ளத்தின் விளைவாக சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளது.

மலைகள் சூழ்ந்த மத்திய இலங்கையின் நுவாரா எலியா மாவட்டத்தில் உள்ள கோட்மாலே பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications