இலங்கை: இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை
இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை.
இந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பிபிசியிடம் தெரிவித்தார்.
பெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்தல்
- பெண்ணுடன் உணவு அருந்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்
ஆடு, கோழி, எருமைக் கன்றுகள் இவ்விழாக்களில் கொல்லப்படும்போது இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு இந்துக்கள் அதிகம் வாழும் யாழ்ப்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில்களில் விலங்குகளைப் பலியிடத் தடை விதித்தது.
அந்த தடை தங்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக விலங்குகளை பலியிடும் இந்து கோயில்களின் நிர்வாகத்தினர் வாதிட்டனர். பல நூற்றாண்டுகால பலியிடும் வழக்கத்தை தொடர அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
தமிழ்நாட்டில்...
இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களில் ஆடு கோழி போன்ற விலங்குகள், பறவைகளைப் பலியிடுவதற்கு தடை விதித்து 2003 ஆகஸ்டு மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த தடை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அசைவம் உண்பவர்களின் உணவு மற்றும் வழிபாட்டு உரிமை மீதான தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.
2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்ததற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் இந்த தடையும் உண்டு. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
பிற செய்திகள்
- பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு
- பாலியல் குற்றச்சாட்டு: மத்திய அரசுப் பள்ளி முதல்வர் பணியில் இருந்து விடுவிப்பு
- அரசு உதவிகளால் குறைந்துள்ளதா விவசாயிகள் தற்கொலை?
- எட்டுவழிச்சாலை: "தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறது"- யோகேந்திர யாதவ்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications