சேனல் 4 தொலைக்காட்சி குழு தமிழர் பகுதிக்கு செல்ல 'எதிர்ப்பு நாடகம்'- கொழும்பு திரும்ப வைத்தனர்!!
அனுராதபுரம்: தமிழர்கள் வாழும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சேனல் 4 தொலைக்காட்சி குழுவினரை செல்ல விடாமல் பாதியிலேயே கொழும்புக்கே திரும்ப வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காமன்வெல்த் நாடுகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்பட இயக்குநர் கலம் மக்கரே உள்ளிட்ட குழுவினருக்கு இலங்கை விசா வழங்கியது. சேனல் 4 குழுவினர் மகிந்த ராஜபக்சை பின் தொடர்ந்தே கேள்விக் கணைகளை துளைத்து வருகின்றனர்.
இந்நிலையில் யாழ் தேவி ரயில் மூலமாக சேனல் 4 குழுவினர் இன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது அனுராதபுரம் அருகே 10 பேர் கொண்ட சிங்கள கும்பல் ஒன்று அந்த ரயிலை மறித்தது.
"புலிகளின் குரலாக ஒலிக்காதே" என்ற பதாகைகளை ஏந்தியபடி அந்த சிங்களக் குழுவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். உடனே அங்கு இருந்த சிங்கள காவல்துறையினர் யாழ்ப்பாணம் போகிறவரை இதேபோல் போராட்டம் நடைபெறும்.. உங்களது பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறியதுடன் ரயிலில் இருந்து அவர்களை இறக்கி வாகனம் மூலம் கொழும்புக்கு கொண்டு வந்துவிட்டனர்.
தமிழர் வாழும் வடக்குப் பகுதியில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களை எங்கே சேனல் 4 குழுவினர் சேகரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இலங்கை அரசே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications