கருணா உட்பட மூவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டம்? கொழும்பு விமான நிலையத்தில் 'உஷார்' பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கருணா உட்பட 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன நேற்று பதவியேற்றார். அதேபோல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அம்பாந்தோட்டையில் உள்ள தமது ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் சென்று தஞ்சமடைந்துவிட்டார் ராஜபக்சே.

Colombo Airport on alert to thwart fleeing

இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்த கருணா மற்றும் 2 முக்கிய அரசியல் பிரமுகர்கள் இலங்கையைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மூவரும் பயன்படுத்தும் வாகனங்களின் விவரங்களும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+