இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: சிறிசேனா அரசுக்கு காமன்வெல்த் பாராட்டு
கொழும்பு: உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதில் உதவி செய்ய தயாராக உள்ளதாக காமன்வெல்த் அமைப்பின் தலைமைச்செயலாளர் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமலேஷ் சர்மா நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்துவதில் சிறிசேனா அரசு விருப்பம் கொண்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

‘‘சீர்திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுகிற புதிய அரசுக்கு உதவ தயாராக இருக்கிறோம். உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதில் உதவி செய்ய தயாராக உள்ளோம்'' என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் ஜனவரி 9-ஆம்தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ள சாதகமான நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளையும் காமன்வெல்த் கவனத்தில் கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் ராணுவம் சாராதவர்கள் கவர்னர்களாக நியமனம்; தலைமை நீதிபதி (சிறுபான்மை தமிழர்) நியமனம் பாராட்டுக்குரியது'' என்றும் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications