களத்தில் கமலேஷ் சர்மா... இன்று தொடங்குகிறது இலங்கை காமன்வெல்த் மாநாடு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: பிரதமர் மன்மோகன் சிங் போக மாட்டார். சல்மான் குர்ஷித் மட்டும் போவார் என்று கூறப்பட்டாலும் கூட இந்தியாவின் கமலேஷ் சர்மாவின் முழு வீச்சிலான ஏற்பாடுகளின் பின்னணியில், இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு இன்று தடபுடலாக தொடங்குகிறது.

மாநாட்டு முதல் ஆளாக நேற்று கமலேஷ் சர்மா கொழும்பு போய்ச் சேர்ந்தார். அவருக்கு ஒரு நாட்டின் தலைவருக்கு அளிப்பது போல பிரமாண்டமான வரவேற்பை அளித்துள்ளது சிங்கள அரசு.

கமலேஷ் சர்மாதான் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தரையிறங்கிய கமலேஷ் சர்மா

கொழும்பில் தரையிறங்கிய கமலேஷ் சர்மா

நேற்று பிற்பகலில் கொழும்புக்கு வந்து சேர்ந்தார் கமலேஷ் சர்மா. இவர்தான் காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

முன்னாள் தூதரக அதிகாரி

முன்னாள் தூதரக அதிகாரி

கமலேஷ் சர்மா இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி ஆவார்.

ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர்

ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர்

ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசுக்கும் மிகவும் நெருக்கமானவர். இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களுக்கு தீவிரமாக ஆதரவு தெரிவத்து வருபவர்.

54 நாடுகளின் கூட்டமைப்பு

54 நாடுகளின் கூட்டமைப்பு

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த் அமைப்பு.

இன்று தொடங்குகிறது மாநாடு

இன்று தொடங்குகிறது மாநாடு

இந்த அமைப்பின் உச்சி மாநாடு இன்று கொழும்பில் தொடங்குகிறது.

5 நாட்களுக்கு இளைஞர் மன்ற நிகழ்ச்சிகள்

5 நாட்களுக்கு இளைஞர் மன்ற நிகழ்ச்சிகள்

ராஜபக்சே மாநாடு தொடங்குவதை இன்று முறைப்படி அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து 9-வது காமன்வெல்த் இளைஞர் மன்றம் என்ற பெயரில் 5 நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வலுவாக ஒன்றிணைவோம்

வலுவாக ஒன்றிணைவோம்

இந்த காமன்வெல்த் இளைஞர் மன்றம், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வலுவாக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் அமைகிறது. காமன்வெல்த் நாடுகளின் இளைய தலைவர்கள் இதில் பங்கேற்று, விவாதிக்கிறார்கள்.

சார்லஸும் பங்கேற்பு

சார்லஸும் பங்கேற்பு

காமன்வெல்த் மாநாட்டின் தலைமை விருந்தினராக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்கிறார். அவர் 3 நாள் நிகழ்ச்சிகளில் அதாவது 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கலந்துகொள்கிறார்.

கேமரூனும் வருகிறார்

கேமரூனும் வருகிறார்

இந்த மாநாட்டில் லண்டன் வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் தனது இலங்கை பயணத்தை நியாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+