இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபட உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியை ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து 46 பேர் கொண்ட குழு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இக்கண்காணிப்புக் குழுவில் கிறிஸ்டினா பிரேதா தலைமை தேர்தல் கண்காணிப்பாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications