கைது செய்யப்பட்ட ராஜபக்சேயின் தம்பி மாஜி அமைச்சர் பசில் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கபட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் மைத்ரிபால சிறிசேன அதிபரானதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. இதனால் மகிந்த ராஜபக்சே தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

Former Minister Basil Rajapaksa admitted to hospital

அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் அவர் மீது போடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் மற்றொரு நிதி மோசடி வழக்கிலும் பசில் ராஜபக்சே மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜ்பக்சே மகன் நாமல் ராஜபக்சேவும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே 3-வது நிதி மோசடி வழக்கில் மீண்டும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பசிலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது அதனையொட்டி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார் என்று சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், முதுகு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+