பிரபாகரன் எங்கே… அவர் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே: கதறும் இலங்கை முஸ்லிம்கள்!

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த பிக்குகள் கொடுந் தாக்குதல் நடத்தினர். இதில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகள், வணிக நிறுவனங்கள் நாசப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களைக் கண்டித்து யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் கூறியதாவது:
இன வன்முறைக்கு பாதிக்கப்பட்ட தர்ஹா நகருக்குச் சென்றிருந்தேன். அவர்களின் வேதனைகளையும், சோதனைகளையும் நேரில் பார்த்த போது, பள்ளிவாசலில் தங்கியிருந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் என் கழுத்தைப் பிடித்து பிரபாகரன் எங்கே? என்று கேட்டார்.
ஏன் என்று நான் கேட்டதற்கு பிரபாகரன் இருந்திருந்தால் முஸ்லிம்கள் மீது கை வைத்திருக்க மாட்டார்களே என்று அந்தப் பெண்மணி கதறினார் என்றார்.












Click it and Unblock the Notifications