கச்சத்தீவு: மார்ச் 14,15-ல் தேவாலய திருவிழா- 4,000 இந்திய பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி!
டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரத்துக்கு மிக அருகே உள்ளது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனால் கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் புனித அந்தோணியார் தேவாலயத்தை கட்டினர்.

புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் இணைந்து பங்கேற்பர். இந்த திருவிழாவானது பண்பாட்டு உறவு சார்ந்ததாகவும் கடந்த காலங்களில் இருந்தது. பண்டமாற்று முறை, இருநாட்டு மீனவர் குடும்பங்களிடையே திருமண உறவு வலுப்படுத்துதல் என பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் கச்சத்தீவு இணைந்ததாக இருந்தது.
ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவை, இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதனால் கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளிட்டவை பறிபோயின. 1976-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் இந்த மீன்பிடி உரிமை, வழிபாட்டு உரிமை உள்ளிட்டவை மீள நிலைநாட்டப்பட்டன. ஆனால் 1980களில் ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தால் கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் செல்வது என்பது கேள்விக்குறியானது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இல்லாமலேயே போனது.
2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 14,15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளன. இலங்கை யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் பிரதீபன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் மொத்தம் 8,000 பேர் பங்கேற்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications