விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாகிறது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்கு பிறகு சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது, பிரபாகரனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல அவரது சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது.
பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால், இவ்வாறு அவரது சொத்துக்களும், போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் அரசுமையாக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் தந்தையும், தாயும் யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் 80 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வசித்து வந்தனர். அப்போது இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிட்டனர்.
அதன்பின், 2002-2004 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடந்தபோது, பிரபாகரன் பெற்றோர்கள் மீண்டும் இலங்கை திரும்பினர். ஆனாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அதேசமயம் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்னியில் உள்ள பாதுகாப்பான வீட்டில் அவ்வப்போது வசித்து வந்தனர்.
போர் காரணமாக இலங்கை வடக்கில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வீடுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இலங்கை ராணுவத்தினர் அவற்றை கைப்பற்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications