இன்று 111 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை கோர்ட்
மன்னார்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 111 பேரை விடுவிக்க அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 26 படகுகளையும் 111 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 12 ஆம் தேதி 111 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதே நாளில் விடுதலை செய்யப்பட்ட 52 மீனவர்களுக்கு மட்டுமே விடுதலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதனால், அந்த 111 மீனவர்களின் நிலமை என்னவென்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை திரிகோணமலை நீதிமன்றத்தில் 111 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி சரவணராஜ், ஆஜர்படுத்தப்பட்ட 111 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
10 மண்டபம் மீனவர்களும் விடுதலை
இதேபோல், கடந்த மாதம் 2ஆம் தேதி மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். காவல் துறையினரின் விசாரணைக்கு பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட 10 மீனவர்களும் இன்று காலை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை இம்மாதம் 31ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 10 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் மண்டபம் மீனவர்கள் 10 பேரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications