சென்னையில் பாக்.உளவாளிகள் பிடிபட காரணமான தீவிரவாதியை இலங்கைக்கு நாடு கடத்தியது மலேசியா!
கொழும்பு: சென்னை, பெங்களூரில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதி முகமது ஹூசைன் முகமது சுலைமான் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டார். அவரிடம் இலங்கை புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்தியாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் உளவாளிகளை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் மலேசியாவில் கண்காணிக்கப்பட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைன் முகமது சுலைமான் என்ற தீவிரவாதியுடன் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்பில் இருப்பதாக அந்நாடு உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தது. இதனடிப்படையில் சென்னையில் ஜாஹீர் உசேன் என்ற உளவாளி சிக்கினான்.
இதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள முகமது ஹூசைன் முகமது சுலைமானை கைது செய்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த மே மாதம் முகமது ஹூசேனை மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முகமது ஹூசைன் முகமது சுலைமானை நேற்று முறைப்படி இலங்கைக்கு மலேசியா நாடு கடத்தியது. அதனைத் தொடர்ந்து சுலைமானிடம் அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு விசாரண நடத்தி வருகிறது.
இதனிடையே சுலைமானை ஒப்படைக்க கோரி இந்தியா, இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications