இலங்கைக்கு விடுதலை புலிகள் அச்சுறுத்தல் நீங்கவில்லை: கோத்தபய ராஜபக்சே பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தாலும், விடுதலை புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை, வெளிநாடுகளில் அந்த அமைப்பு பலமாக உள்ளது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும், அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரருமான கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் வரும் 8ம்தேதி நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சிறிசேனா களமிறக்கப்பட்டுள்ளார்.

LTTE still active overseas: Rajapaksa

இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவு கேட்டு பாதுகாப்பு செயலாளரும், அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்சே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "பிரபாகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால், விடுதலை புலிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல் முற்றாக நீக்கப்படவில்லை.

விடுதலை புலிகள் வெளிநாடுகளில் மிகவும் பலமாக உள்ளனர். எனவே சற்று ஏமாந்தாலும், 1980களில் இலங்கை கண்ட இருண்ட உலகத்திற்கு, மீண்டும் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதில் நியாயம் கிடையாது. இவ்வாறு கோத்தபய பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+