இறுதி யுத்தத்தின் போது ஏவுகணைகளை வாங்க முயற்சித்த விடுதலைப் புலிகள்... திடுக் தகவல்
கொழும்பு: இலங்கை அரசுடனான இறுதி யுத்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து ஏவுகணைகளை வாங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கிளிநொச்சி இலங்கை ராணுவ வசம் போனது. 2009 மே 18-ந் தேதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த இறுதிகால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய கேபி என்கிற செல்வராசா பத்மநாதன். சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டு வந்த காஸ்ட்ரோவை நீக்கி கேபியை நியமிக்கும் உத்தரவு கடிதத்தை கிளிநொச்சியில் செயல்பட்ட என்ஜிஓ ஒன்றின் மூலம் மலேசியாவில் இருந்த கேபிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொலைபேசியில் நேரடியாக பேசுவது கிடையாது என்பதால் அவரது முதன்மை தளபதியாக இருந்த வேலு என்பவர் மூலமே கேபி தொடர்பில் இருந்து வந்தார். இந்த உரையாடல்களை இலங்கை அரசின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, ஒட்டுக் கேட்டு வந்தார்.
அப்போதுதான், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, ஏவுகணைகள் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என கேபியிடம் கூறியிருக்கிறார். இதில் கேபி கடுப்பாகி சார்லஸ் ஆண்டனியை திட்டினார் எனவும் அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல், நந்திகடலில் சிக்கிய தமிழர்களை மீட்க அமெரிக்கா கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க முயற்சித்தது; ஆனால் இதை பிரபாகரன் விரும்பமாட்டார் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்க, 'நாங்கள் அமெரிக்கர்கள்! புலிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்ததாகவும் அப்பத்திரிகையில் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications