எதிர்பார்ப்பு பலித்தது... இலங்கையில் ராஜபக்சேவைச் சந்தித்தார் மோடி! என்ன பேசினார்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இரண்டு நாள் பயணமாக இலங்கைச் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார்,

மூன்று நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தார் பிரதமர் மோடி. அந்த சுற்றுப்பயணத்தின் இறுதி இரண்டு நாட்கள் மோடி இலங்கைக்கு பயணம் சென்றிருந்தார்.

இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற விழாவுக்கு வருகை தந்தது, இலங்கைத் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தது என ஏற்கனவே மோடி - ராஜபக்சே உறவு நாடறிந்த விஷயம் தான்.

எனவே, இலங்கை செல்லும் மோடி அங்கு ராஜபக்சேவைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. அதன்படி, தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியா ஹவுஸ்-ல் நேற்று மாலை மோடியும், ராஜபக்சேவும் சந்தித்துக் கொண்டனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் 'டுவிட்டரில்' தகவல் வெளியிட்டுள்ளார். இரு தலைவர்கள் சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசிக் கொண்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஹாங்காங் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘தனது தேர்தல் தோல்வியில் இந்திய உளவுத்துறையான ‘ரா' பெரும்பங்காற்றியது' என ராஜபக்சே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், மோடி - ராஜபக்சே சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+