தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்! யாழ். பல்கலை.யில் ஈகைச் சுடரேற்றம்!!
கிளிநொச்சி: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதன் 6ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தடைகளை மீறி இன்று தமிழீழத் தாயகமான இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த நாள் இன்று மே 18. இந்த இறுதி யுத்த நாளில் மட்டும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூற இலங்கை அரசும் ராணுவமும் தடை விதித்தது. அத்துடன் சிங்கள ராணுவ வெற்றியாக கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதனை நிராகரித்த தமிழர்கள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார்.
இதேபோல் தமிழீழத் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகவு நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் பிரமாண்ட நினைவுச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications