இலங்கை தேர்தலில் போட்டியிட்ட 150 புத்த பிக்குகளில் ஒருவர்கூட ஜெயிக்கலை..
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 புத்த பிக்குகளில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. தற்போதைய நிலையில் நியமன எம்.பி.க்கள் மூலம் ஒன்றிரண்டு புத்த பிக்குகள் மட்டுமே நாடாளுமன்றத்துக்குள் நுழையக் கூடும் எனத் தெரிகிறது.
இலங்கை அரசியலில் புத்த பிக்குகளும் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றனர். புத்த பிக்குகளின் பொதுபல சேனா என்ற அமைப்பு வன்முறை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பொதுபல சேனாவின் பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியும் புத்த பிக்குகளை களமிறக்கியது. மொத்தம் 150 புத்த பிக்குகள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் எந்த ஒரு புத்த பிக்குமே தேர்தலில் வெல்ல வில்லை. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன எம்.பி.க்களாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகையால் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த முறை புத்த பிக்குகள் ஒன்றிரண்டு பேர்தான் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications