இலங்கை: தொலைபேசி அழைப்பை ஏற்காத தூதரை திருப்பியழைத்த அதிபர்
ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதர் மற்றும் பிற தூதரக ஊழியர்கள், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை எனக்கூறி அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மைத்திரி பால சிறிசேன, வியன்னாவில் தூதரிடம் பேச விரும்பியுள்ளார். ஆனால், அங்குள்ள தூதரக அலுவலகத்தை நான்கரை மணி நேரமாக தொடர்பு கொள்ள முடியவில்லை
"கடந்த வாரம் நான் தூதரிடம் பேச விரும்பினேன். என்னுடைய பணியாளர்கள் நான்கரை மணி நேரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். 6 தொலைபேசிகளிலும் மணி அடித்தது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. இது ஆஸ்திரியாவுக்கான தூதரகம் மட்டுமல்ல. மேலும் நான்கைந்து நாடுகளுக்குமான தூதரகமும் உள்ளது"
"6 தொலைப்பேசிகளும் அடித்த நிலையில் நான்கரை மணி நேரமாக அதனை எடுக்க யாரும் இல்லை. இந்த ஒரு தூதரகத்துக்கு மட்டுமல்ல, மேலும் பிற தூதரகத்துக்கும் செய்தி அனுப்ப நான் விரும்பினேன்" என சிறிசேன தெரிவித்தார்.
தூதரையும், ஊழியர்களையும் ஏன் திரும்ப அழைத்தார் என கொழும்புவில் ஒரு விழாவில் பேசும்போது தெரிவித்தார்.
இந்நிலையில், தூதரகத்தின் தொலைபேசிகளை எடுக்கவில்லை என அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டார்கள் என்ற ஊடக செய்தியை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
அனைத்து ஊழியர்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தவறு. தூதரும், பிற ஊழியர்களும் தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனரா அல்லது அவர்களின் அலைபேசியில் அழைத்தனரா என்பது குறித்து சிறிசேன அலுவலகம் தெளிவுபடுத்தவில்லை.
பிற செய்திகள்:
- புளோரன்ஸ் புயல்: வரலாறு காணா வெள்ளம்; தொடர்பு அறுந்துபோன அமெரிக்க நகரம்
- நீதிமன்றம், போலீஸ் மீது வசை: எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு
- கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி?
- தந்தை பெரியாரின் பார்வையில் காதல் முதல் கௌரவம் வரை
- யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications