தோல்வி பயத்தால் வெளிநாட்டுக்கு தப்பி ஓட ராஜபக்சே முயற்சி? விமான டிக்கெட்டுகள் முன்பதிவு?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார் எனக் கூறப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் தாம் இலங்கையை விட்டு ஒரு போதும் தப்பி ஓடமாட்டேன் என்று ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் வரும் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால், தனது மகன்கள் பயன்படுத்தும் கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள 6 பந்தய கார்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் 4 கார்களை கடந்த 31ந் தேதி அனுப்பியதாக சிங்கள இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது.
மேலும் வரும் 9 மற்றும் 10-ந் தேதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் 2 பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் அவரை ராஜபக்சேவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை நிராகரித்துள்ள ராஜபக்சே, நான் பிரபாகரன் இருந்த காலத்திலேயே நாட்டை விட்டு ஓடாதவன்.. இப்போது ஓடிவிடுவேனா? தேர்தல் முடிவுகள் வந்த உடன் அனைத்து விமான நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று எதிர்க்கட்சியினர் பேசி வருவது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications