For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவத்தின் பாலியல் தொந்தரவால் பள்ளிக்கூடம் செல்ல அஞ்சும் ஈழத் தமிழ் சிறுமிகள்

By Mathi
Google Oneindia Tamil News

கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தினரின் பாலியல் தொந்தரவால் கிளிநொச்சி பகுதியில் பள்ளிக்கூடம் செல்வதைக் கைவிடும் தமிழ் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி முறிப்பு, கோணாவில் பகுதிகளை சுற்றி இலங்கை இராணுவத்தினர் காவலரண்களை அமைத்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இடங்கள்.

Sexual harassment by troops triggers surge in Murippu school dropouts

இந்த வழியாகத்தான் சீருடைகளுடன் பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் சென்று வருகின்றனர். இதே வழியாகத்தான் அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கு கல்வி கற்கவும் மாணவிகள் வந்து செல்கின்றனர்.

அப்படி மாணவிகள் செல்லும் போது பாலியல் வார்த்தைகளை பயன்படுத்தி சீண்டுவது, மாணவிகளைக் கண்டதும் தமது கீழாடைகளை கழற்றிவிட்டு நிற்பது போன்ற வக்கிரங்களில் ஈடுபடுவதை இலங்கை ராணுவத்தினர் வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீடுகளுக்குள்ளேயே தமிழ் சிறுமிகள் முடங்கிக் கிடக்கும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Sexual harassment by military personnel has led to a surge in girls dropping out of school in Murippu, Kilinochchi, local sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X