இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைப்பு? ஜூன் இறுதியில் தேர்தல்?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படலாம் எனவும் ஜூன் இறுதியில் தேர்தல் நடைபெறக் கூடும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அதிபர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்வினார்.
ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஆட்சி அமைத்தன.

கங்கணம் கட்டும் ராஜபக்சே தரப்பு
தற்போது பெரும்பாலான கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவுக்கு எதிராக நிற்கின்றன. இருப்பினும் மகிந்த ராஜபக்சே தரப்போ வரட்டும் நாடாளுமன்றத்தேர்தல்.. நாங்கள் ஒரு கை பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

எப்படியும் உடையும்ல...
அதாவது ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் கணிசமானவர்கள் தற்போது மைத்ரிபால பக்கம் இருக்கிறார்கள்.. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வரும் போது எப்படியும் இந்த ஆதரவாளர்களை தங்கள் வசம் வளைத்துவிட முடியும் என்பது ராஜபக்சே அணியின் கணிப்பு...

குடைச்சல் கொடுக்கலாமே..
இவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டால் மைத்ரிபால சிறிசேனவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க முடியும் என்பதும் அவர்கள் வியூகம்..

நாடாளுமன்றம் கலைப்பு- தேர்தல்
இந்த பரபரப்பான காட்சிகள் இனி அரங்கேறப் போகிறது... அடுத்த வாரமோ அல்லது மே முதல் வாரத்தில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. ஜூன் மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications