இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் ராணுவம்
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: அதிபர் ராஜபக்சேவின் உத்தரவையும் மீறி, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீடுகளை ராணுவம் இடித்துத் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள தமிழர்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக, அதிபர் ராஜபக்சேவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொலைபேசியில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த பிரச்னை குறித்து ராஜபக்சே, ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வீடுகளை இடிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால், அதனையும் மீறி தமிழர்களின் வீடுகளை ராணுவத்தினர் இடித்துத் தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு உடைமையாக்கப்பட்டுள்ள அந்தப் பகுதி ராணுவத்திற்கு சொந்தமானது எனக்கூறி, வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications