இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை வீரர் திடீர் மரணம்… நீர்மூழ்கி பயிற்சியின் போது பரிதாபம்!
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை வீரர் திடீரென மரணம் அடைந்துள்ளார். நீர்மூழ்கி பயிற்சியின் போது அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு: இந்தியாவிலுள்ள கடற்படைத் தளம் ஒன்றில் இடம் பெற்ற பயிற்சி ஒன்றின் போது, இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கடற்படை வீரர் வை.பி.என்.ஆர். வீரசிங்க. நீழ்மூழ்கி பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது நேற்று மரணமடைந்ததாக இந்தியக் கடற்படை தெரிவித்திருக்கின்றது. அரபிக் கடற் பகுதி கடற்படைத் தளத்தில் இந்தப் பயிற்சி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்தேறியுள்ளது. இது வழக்கமான ஒரு பயிற்சி என்றாலும், இதில் கடற்படை வீரரே மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரசிங்க, நீண்ட நேரமாக வெளியே வராததால் பதற்றமடைந்த இந்தியக் கடற்படையினர் உடனடியாக நீரில் குதித்து தேடுதலை நடத்தினார்கள். உயிருடன் அவர் மீட்கப்பட்டு முதலுதவியும் அளிக்கப்பட்டது. பின்னர் கடற்படை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கடந்த 3ஆம் தேதி முதல் இந்தப் பயிற்சியில் இலங்கையைச் சேர்ந்த கடற்படை வீரர் இடம் பெற்று வருகின்றனர். இந்த மரணம் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மரணம் குறித்து விசாரணையை நடத்துவதற்காக இந்தியக் கடற்படை விசாரணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications