Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறிசேனா..தேர்தலில் மீண்டும் தலையெடுக்க ராஜபக்ச திட்டம்..

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் தேர்தலின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார்.

sirisana

அந்த வாக்குறுதிக்கு ஏற்ப, நடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் நேற்று கையெழுத்திட்ட சிறிசேனா, அந்த உத்தரவை அரசு அறிவிப்பாணையாக வெளியிட அனுப்பினார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே தற்போது அரசியலில் தீவிரம் காட்டாமல் உள்ளார். அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். எனவே, அரசியலில் மீண்டும் அதிகாரம்மிக்க இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ள அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள இலங்கை அரசியலை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+