இலங்கை: கோத்தபாய ராஜபக்சே அரசு பதவி விலக வலியுறுத்தி களுத்துறையில் ஜே.வி.பி. பிரமாண்ட போராட்டம்
கொழும்பு: இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி களுத்துறையில் ஜேவிபியினர் இன்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

தலைநகர் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தற்போது ஜேவிபியும் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறது. களுத்துறையில் இன்று ஜேவிபி சார்பில் பிரமாண்ட கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Recommended Video
இதேபோல் நாளை மாலை கொழும்பு-புறக்கோட்டையில் ஜேவிபியின் இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தினர். வரும் 23-ந் தேதி நுகேகொடையிலும் வரும் 29-ந் தேதி பொலன்னறுவையிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications