இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: 196 இடங்களுக்கு ராஜபக்சே உள்பட 6,151 பேர் போட்டி!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கான 196 எம்.பி. இடங்களுக்கு மொத்தம் 6,151 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் 13 எம்.பிக்களைத் தேர்வு செய்ய 462 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 196 பேர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள். எஞ்சியோர் கட்சிகளால் நியமிக்கப்படும் எம்.பி.க்கள்.

இலங்கை நாடாளுமன்றம் கடந்த ஜூன் 26-ந் தேதி நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 6-ந் தேதி தொடங்கி நேற்று பகல் 12 மணிவரை நடைபெற்றது.
மொத்தம் 6,151 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3, 653 வேட்பாளர்கள், சுயேட்சைகளாக 2, 498 வேட்பாளர்கள் அடங்குவர்.
யாழ்ப்பாணத்தில்...
தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் 13 எம்.பிக்களைத் தேர்வு செய்ய 462 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 எம்.பிக்களை தேர்வு செய்ய 210 வேட்பாளர்களும்
வன்னி மாவட்டத்தில் 6 எம்.பிக்களை தேர்வு செய்ய 252 வேட்பாளர்களுமாக
மொத்தம் 462 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications