இலங்கையில் மீண்டும் வன்முறை- முஸ்லிம் கடைகளை எரித்து சிங்கள கொடி ஏற்றம்- ராஜபக்சே ஆதரவு போலீஸ் சதி?
இலங்கையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறைகளின் பின்னணியில் ராஜபக்சே ஆதரவு போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

கண்டி: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கண்டியில் முஸ்லிம்களின் கடைகளை எரித்து சிங்கள கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த அசாதாரண சூழல்களுக்கு ராஜபக்சே ஆதரவு போலீஸ் கும்பலே காரணம் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையின் அம்பாறை, கண்டியில் முஸ்லிம்களை குறி வைத்து சிங்களர் திடீர் தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
சிங்கள பவுத்த பிக்குகளே இந்த வன்முறைகளை அரங்கேற்றினர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

மீண்டும் வன்முறை
இதையடுத்து வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் கண்டி, மாத்தளை பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரை
முஸ்லிம்களின் எஞ்சிய வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

சிங்கள கொடி ஏற்றம்
இத்தகைய வன்முறைகளின் பின்னணியில் ராஜபக்சே ஆதவு போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எரிக்கப்படும் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் முன்பாக சிங்கள கொடியும் ஏற்றப்பட்டு வருகிறது.

ஊரடங்கு அமல்
இதையடுத்து கண்டி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்; பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications