வாக்குக்கு பின் வாழ்க்கை: தாலி கட்டிய கையோடு மணக்கோலத்தில் ஓட்டுபோட்ட இலங்கை மாப்பிள்ளை
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மணக்கோலத்தில் வந்து ஒரு தம்பதி வாக்களித்தது.

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில்தான் முன்னாள் அதிபர், ராஜபக்சே போட்டியிட்டார்.
This is becoming a trend now, wedding couples voting #lka #GenElecSL #SriLanka pic.twitter.com/oa3ZJjQuoH
— Azzam Ameen (@AzzamAmeen) August 17, 2015 இந்நிலையில், சீகிரிய பகுதியில், மணக்கோலத்தில் ஒரு தம்பதி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தது. இலங்கை பாரம்பரிய முறைப்படியான திருமண கோலத்தில் அந்த தம்பதிகள் வந்தனர். அதில் மணமகன், இலங்கை குடிமகனாகும். மணமகள் ஜப்பான் நாட்டுக்காரர்.
எனவே, மணமகன் வாக்களித்து திரும்புவம்வரை மணமகள் வெளியே காத்திருந்தார். பிறகு கணவரோடு கிளம்பி சென்றார். இதை பார்த்த அப்பகுதி வாக்குச்சாவடி அதிகாரிகள் போட்டோக்களை கிளிக்கி தள்ளினர்.
வாக்களிக்க வந்த மணக்களுக்கு அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications