டால்பின்களை பார்த்த பூரிப்பு.. ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி.. கடித்து குதறிய சுறா..பலியான பயங்கரம்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வான் ஆற்றில் டால்பின்களை பார்த்த மகிழ்ச்சியில் தண்ணீரில் குதித்து நீந்த முயன்ற 16 வயது சிறுமியை சுறா மீன் தாக்கி கடித்து இழுத்து சென்றது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள ஆற்றில் கூட்டம் கூட்டமாக டால்பின்களை பார்த்த மகிழ்ச்சியில் 16 வயது சிறுமி ஜெட் ஸ்கைஸில் இருந்து தண்ணீருக்குள் குதித்ததோடு, டால்பின்களின் அருகே நீந்த முயற்சித்துள்ளார். இந்த வேளையில் குறுக்கே வந்த பெரிய சுறாமீன் சிறுமியை கடித்து குதறியது. இதில் சிறுமி துடிதுடித்து இறந்த பயங்கரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் நார்த் ப்ரீமண்டல் பகுதியில் ஸ்வான் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் டால்பின்கள் ஏராளமாக வசித்து வருகின்றன.
இங்கு பொதுமக்கள் ஜெட் ஸ்கைஸ்(Jet Skis) பயணம் செய்யலாம்.
இதனால் ஏராளமானவர்கள் இந்த ஆற்றுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதோடு ஜெட் ஸ்கைஸில் பயணித்து டால்பின்களை ரசித்து வருகின்றனர்.

டால்பின்களை பார்த்த பூரிப்பு
இந்நிலையில் தான் நேற்று 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஆற்றில் ஜெட் ஸ்கைஸில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு இடத்தில் டால்பின்கள் கூட்டம் கூட்டமாக தென்பட்டுள்ளன. இதை பார்த்து அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் டால்பின்களை பார்த்து பூரித்துபோன 16 வயது சிறுமி ஜெட் ஸ்கைஸில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். அதோடு டால்பின்கள் பக்கத்தில் நீந்த முயற்சித்துள்ளார்.

சிறுமியை கடித்து குதறிய சுறா
இந்த வேளையில் எதிர்பாராத விதமாக சுறாமீன் ஒன்று சிறுமியை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதை யாரும் எதிர்பாராததால் அவர்கள் அனைவரும் கூச்சலிட்டனர். மேலும் சுறாவின் பிடியில் இருந்து சிறுமியை மீட்க அவர்கள் முயன்றனர். ஆனால் சுறாவின் பிடியில் இருந்து சிறுமியை அவர்களால் மீட்க முடியவில்லை. சுறா மீன் சிறுமியை கொடூரமாக கடித்து குதறியது.

சம்பவ இடத்திலேய பலி
இறுதியில் சிறுமியை சுறாமீன் விடுவித்தது. சிறுமியை அனைவரும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதாவது சுறா தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சிறமி இறந்தது தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?
இதுபற்றி ப்ரிமாண்டீல் மாவட்ட போலீஸ் அதிகாரி பால் ராபின்சன் கூறுகையி்ல, ‛‛டால்பின்களை பார்த்து அதன் அருகே சிறுமி நீந்த முடி செய்து தண்ணீரில் குதித்துள்ளார். சிறுமி தண்ணீரில் நீந்தியபோது அவரை சுறா தாக்கியது. தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து உள்ளே இழுத்து சென்றது. சிறுமியை தாக்கிய சுறா எந்த வகையான இனத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம்'' என்றார்.

சுறா எப்படி வந்தது?
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்வான் ஆற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மீன்வளத்துறையினர் கூறுகையில், ‛‛இந்த ஆற்றில் சுறாமீன் இருப்பது இல்லை. தற்போது அது எங்கிருந்தது வந்தது? என்பது புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்.'' என்றனர். ஆஸ்திரேலியாவில் சுறா தாக்குதலுக்கு மனிதர்கள் பலியாவது இது முதல் முறையல்ல. கடந்த 2021ல் பெர்த்தின் போர்ட் பீச்சில் வெள்ளை சுறா, 57 வயது நபரை கடித்து கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications