2 பேருமே வேண்டாம்.. அதிரடியாக ஒதுக்கிய ரோஹித் சர்மா.. அஸ்வின்தான் பெரிய ஆபத்தே! பிளேயிங் 11 சீக்ரெட்
சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 உலகக் கோப்பை ஆட்டம் இன்று நடக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிக முக்கியமானது. இந்திய அணி இன்று டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
கடந்த உலகக் கோப்பை டி 20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடியது. அதில் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது.

டாஸ்
இந்தியா இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால் அதன்பின் ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தி வென்றது. இந்த நிலையில் இந்த வருட உலகக் கோப்பையில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. அதேபோல் இந்த முறை இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. கடந்த உலகக் கோப்பை முதல் போட்டி தோல்விக்கு இன்று இந்திய அணி பதிலடி கொடுக்க முடியும்.

ஷமி
இன்று இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட படியே ஷமி சேர்க்கப்பட்டு உள்ளார். ஷமி கடந்த பயிற்சி ஆட்டத்தில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த ஓவரில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் ஆடும் 11ல் இவர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஹர்ஷல் பட்டேல் சரியாக பந்து வீசுவது இல்லை. ஆசிய கோப்பை தொடரிலும் ஹர்ஷல் பட்டேல் சரியாக ஆடவில்லை. டெத் ஓவர்களில் இவர் அதிகமாக ரன்களை கொடுத்தார்.

அஸ்வின்
இதனால் ரோஹித் சர்மா தற்போது ஹர்ஷல் பட்டேலை ஓரம் கட்டி உள்ளார். ஷமி கடந்த ஒரு வருடமாக டி 20 போட்டிகளில் ஆடவே இல்லை. இருப்பினும் அவருடைய அனுபவம் காரணமாக இன்று அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்னொரு இரண்டு பாஸ்ட் பவுலர்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரும் ஆடும் வாய்ப்புகள் உள்ளன. இது போக இரண்டு ஸ்பின் பவுலர்களாக அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆட வாய்ப்புகள் உள்ளன.

ஸ்பின்
சாஹல் சரியான பார்மில் இல்லை என்பதால் அஸ்வினை உள்ளே கொண்டு வந்து உள்ளனர். அதேபோல் அஸ்வின் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் ஆபத்தான வீரராக இருப்பார். பாகிஸ்தானின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் இன்று சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக அக்சர் பட்டேல் நன்றாக பேட்டிங்கும் செய்வார் என்பதால் அவரும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணி
இன்று இந்திய அணியிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது. தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்று உள்ளார். ஷமி வரை இந்திய அணியில் நல்ல பேட்டிங் செய்ய கூடிய வீரர்கள் உள்ளனர். கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.












Click it and Unblock the Notifications