ஆஸ்திரேலிய கொடூரம்.. துப்பாக்கி சூடு நடத்திய தந்தை - மகன்.. பாகிஸ்தான் பின்னணி.. கொல்லப்பட்ட 16 பேர்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அங்கு யூத நிகழ்ச்சி ஒன்று நடந்த நிலையில், உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 16 பேர் உயிரிழந்தனர்.

தந்தை மகன் சேர்ந்து நடத்திய தாக்குதல்
பாண்டி கடற்கரையில் தந்தை-மகன் இருவர் சேர்ந்துதான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தந்தை 50 வயதான நவீத் அக்ரம் சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மகன் சஜித் அக்ரம் மருத்துவமனையில் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மாலை, யூத மக்கள் பங்கேற்ற 'கடற்கரையோர ஹனுகா' (Chanukah by the Sea) எனப்படும் நிகழ்வின் போது பாண்டி கடற்கரையில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா தாக்குதல்
தாக்குதலின் தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகப் போலீசார் அறிவித்தனர். இத்தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட யூத வெறி தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நவீத் அக்ரம் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தவர் என்றும், சட்டப்பூர்வமாகப் பல ஆயுதங்களைச் சொந்தமாக வைத்திருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
நேற்று தாக்குதலுக்குப் பிறகு ஆறு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதை போலீசார் உறுதிசெய்தனர். தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில், நவீத் அக்ரமின் வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) உட்படப் பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டன. அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு தகவலைத் தொடர்ந்து, இரவு 6:45 மணியளவில் பாண்டி கடற்கரை கேம்ப்பெல் பரேட் பகுதிக்கு அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, போலீசார் அப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
துணிச்சல்
இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலின்போது, ஒரு நபர் துணிச்சலுடன் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்கொண்டார். பார்கிங் அருகே நின்று அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காரின் பின்னால் ஒளிந்து கொண்டே அருகே வந்த அவர், மர்ம நபர் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மர்ம நபரை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும். அகமது மட்டும் சரியான நேரத்தில் துப்பாக்கியைப் பறிக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து இருக்கும்.சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த 15 விநாடி வீடியோவில் கையில் எந்தவொரு ஆயுதங்களும் இல்லாத அகமது துணிச்சலாக சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தள்ளிவிட்டு அவர் கையில் இருந்து துப்பாக்கியை பிடுங்கியது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications