உள்ளே வந்து "ஏதோ" சொன்ன ஜாம்பவான்.. கியரை மாற்றிய பாகிஸ்தான்.. உடனே ஷமியை அனுப்பிய ரோஹித்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 உலகக் கோப்பை 2022 போட்டியில் இந்திய அணி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் அணி திணறலாக ஆடியது. இதில் முதல் ஓவரில் 1 வைட் தவிர ரன் எதுவுமே செல்லவில்லை.

ரன் செல்லவில்லை

ரன் செல்லவில்லை

இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் வீசிய முதல் பந்திலேயே பாபர் ஆஸம் டக் அவுட் ஆனார். அதன்பின்பும் பாகிஸ்தான் அணி ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தது. பின்னர் அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் ரிஸ்வானும் 12 பந்தில் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இரண்டு டாப் ஓப்பனிங் வீரர்களை இழந்து பாகிஸ்தான் அணி சிதறிக்கொண்டு இருந்தது.

10 ஓவர்கள்

10 ஓவர்கள்

10 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 60-2 ரன்கள் எடுத்து மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஹெய்டன் இன்று களத்திற்குள் வந்தார். 10வது ஓவர் முடிந்து பிரேக்கில் உள்ளே வந்த அவர் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதோ அறிவுரை கூறினார். இப்திகார், ஷான் இரண்டு பேரிடமும் எதோ சொன்னார். அடுத்த ஓவரிலேயே இரண்டு பேரும் அதிரடி காட்டினார்கள்.

அதிரடி

அதிரடி

அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பவுலிங்கில் ஒரு சிக்ஸ் சென்றது. பின்னர் அக்சர் ஓவரில் இப்திகார் மூன்று சிக்ஸ் அடிக்கடி. ஹெய்டன் வந்து சென்ற பின் பாகிஸ்தான் அணியின் கியர் மாறியது. பாகிஸ்தான் அணி இப்படி ஸ்பின் பவுலர்களை அடிக்க தொடங்கியதும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக பவுலிங்கை மாற்றினார். ஸ்பின் பவுலர்களை அடிக்கிறார்கள் என்று உடனே பாஸ்ட் பவுலர்களை ரோஹித் சர்மா களமிறங்கினார்.

ஷமி

ஷமி


ஷமி மற்றும் பாண்டியா ஆகியோரை ரோஹித் சர்மா களமிறங்கினார். இதன் மூலம் ஷமி வீசிய அடுத்த ஓவரிலேயே இப்திகார் அவுட் ஆனார். பின்னர் பாண்டியா வீசிய ஓவரில் அடுத்தடுத்து ஷதாப் கானும், ஹைதர் அலியும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் அணி கியரை மாற்றியதும் ரோஹித் சர்மா சிறப்பாக பிளான் போட்டு பாஸ்ட் பவுலர்களை கொண்டு வந்து விக்கெட் எடுத்தார். இதனால் ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இந்தியாவிற்கு சாதகமாக மீண்டும் போட்டி திரும்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+