மோசம்.. "அந்த" வீரரை தட்டி தூக்கும் ரோஹித்.. கவனம் பெறும் தமிழர்.. இன்று ஆட போகும் 11 பேர் யார்?
சிட்னி: உலகக் கோப்பை டி 20 தொடரில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மேட்ச் நடக்க உள்ளது.
இன்று மாலை 4.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்க உள்ளது. முதல் இரண்டு சூப்பர் 12 ஆட்டங்களில் அடுத்தடுத்து இந்தியா வெற்றிபெற்று விட்டது.
Recommended Video
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்து வரை சென்ற ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றிபெற்றது.
அதன்பின் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி எளிதாக இரண்டாவது வெற்றியை பெற்றது.

நெதர்லாந்து
இன்று இந்திய அணி வெற்றிபெறுவதன் மூலம் செமி பைனலுக்கு செல்வது எளிதாகும். குழுவில் இருக்கும் மற்ற அணிகள் கத்துக்குட்டி அணிகள் என்பதால் இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், அடுத்து செமி பைனல் செல்வது எளிதாக இருக்கும். இன்று மழை பெய்யவும் வாய்ப்பு இல்லை என்று வானிலை அறிக்கை தெரிவித்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா
இன்றைய போட்டி பெர்த் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பிட்ச் பொதுவாக அதிக பவுன்ஸ் ஆகும். சாதாரணமாக வீசினாலே நன்றாக பவுன்ஸ் ஆக கூடிய பிட்ச் ஆகும். இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதே சரியாக இருக்கும். பொதுவாக இங்கு முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் 133 ஆக உள்ளது. ஆனாலும் கடந்த 3 போட்டிகளாக இங்கு சேசிங் செய்யும் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. இதனால் இந்தியா டாஸ் வென்றால் சேசிங் செய்யவே வாய்ப்பு உள்ளது.

டாஸ்
இன்று தென்னாப்பிரிக்க அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். அதனால் இன்று அஸ்வின் கண்டிப்பாக முக்கியத்துவம் பெறுவார். பொதுவாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்வார். நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் இவர் சிறப்பாக பவுலிங் செய்தார். இதனால் இன்று அஸ்வினின் ஆட்டம் அதிகம் கவனம் பெறும்.

கே. எல் ராகுல்
இந்த சீசனில் கே. எல் ராகுல் தொடக்கத்தில் இருந்தே திணறயபடி ஆடி வருகிறார். முக்கியமாக காலுக்கு வந்த பந்தை அடிக்க முடியாமல் கடுமையாக திணறினார். வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ராகுல் அவுட் ஆனார். இந்த நிலையில் இன்றும் நெதர்லாந்துக்கு எதிராக திணறியபடி ராகுல் அவுட் ஆனார். 12 பந்துகள் பிடித்த அவர் 100 ஸ்டிரைக் ரேட்டிற்கும் குறைவாக ஆடினார். ஆசிய கோப்பையில் இருந்தே கே. எல் ராகுல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறார்.

மோசம்
முக்கியமாக பந்து ஸ்விங் ஆகி காலுக்கு வந்தால் அதை எப்படி அடிப்பது என்று தெரியாமல் ராகுல் கடுமையாக திணறுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படித்தான் ராகுல் அவுட் ஆனார். இதனால் அவரை அணியில் எடுக்க கூடாது. மாறாக பண்டை அணியில் ஒப்பனராக இறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ராகுல் இப்படி மோசமாக சொதப்புவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விமர்சனம்
இவரை இனியும் ஓப்பனிங் இறக்க கூடாது. போதுமான அளவு வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று கூறி வருகின்றனர். ஆனாலும் கே. எல் ராகுலை இன்று நீக்குவதற்கான வாய்ப்பு குறைவு. பெரும்பாலும் இந்திய அணி அதே 11 வீரர்களுடன் இன்று களமிறங்கும். இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications