கொரிய பெண்கள் மீது மோகம்! "பலாத்காரம், ரகசிய வீடியோ.. " ஆஸ்திரேலியாவில் சிக்கிய டாப் இந்திய புள்ளி
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பெண்களை ஏமாற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பல அதிர வைக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பெண்களை ஏமாற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் மீது புகார் எழுந்த நிலையில், அங்கு அவரது வீட்டைச் சோதனை செய்த போது மொத்தம் 47 வீடியோக்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், அந்த நபர் பலாத்காரம் செய்த பெண்கள் பெயர்களைக் கொண்டு தனியாக ஒரு லெட்ஜரையே பராமரித்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முக்கிய புள்ளி
இது தொடர்பான வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜூரிக்கள் தங்கள் இறுதி முடிவை எடுக்கும் முன்பு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களை பார்த்துள்ளனர். சற்று நேரத்திற்கு மேல் அந்த கொடூரத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால், அதைப் பாதியில் நிறுத்திய ஜூரி, வீடியோக்கள் கொடூரமாக இருந்ததால்.. முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்புமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கில் பாலேஷ் தங்கர் என்பவரை ஆஸ்திரேலியா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஆஸ்திரிலேய இந்தியர்கள் சமூகத்தில் முக்கியமான நபராவார்.

பலாத்காரம்
அவர் மீது 13 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் உயர்தர ஹோட்டலில் பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் அவர் எடுத்து வைத்துள்ளார். கொரியப் பெண்களைக் குறிவைத்து பலாத்காரம் செய்துள்ளார். வேலைக்கு நேர்காணலுக்கு அழைப்பது போல அழைத்து இந்த அட்டூழியத்தைச் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

என்ன நடந்தது
மலேஷ் மீது 13 பாலியல் வன்கொடுமை, அனுமதியின்றி நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்தாக 17 வழக்குகள், மயக்க மருந்து கொடுத்தாக ஆறு வழக்குகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பலாத்கார சம்பவங்கள் 2018 ஜனவரி முதல் அக்டோபர் வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. கொரிய மொழி மற்றும் ஆங்கிலம் பேசுவோர் வேலைக்குத் தேவை என்று அவர் விளம்பரத்தை வெளியிடுவாராம். பின் நேர்காணல் என்ற பெயரில் சிட்னியின் ஹில்டன் ஹோட்டல் பாரில் அவர்களைச் சந்திப்பாராம்.

47 வீடியோக்கள்
அவர்களிடம் சிறிது நேரம் பேச்சுக் கொடுக்கும் அவர், வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வார்.. பின்னர் அவர்களின் டிரிங்ஸ்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிடுவார். சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைவார்கள். அப்போது மயக்கத்தில் இருக்கும் கொரியப் பெண்களை அவர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த கொடூரத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். இதுபோல இருக்கும் 47 பலாத்கார வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெண்களின் பெயர்களைத் தனியாக லிஸ்ட் போட்டுச் சேகரித்து, அதில் அந்த வீடியோக்களை வைத்துள்ளார்.

ரகசிய கேமரா
மது அருந்திய பிறகு, பெண்கள் தலைசுற்றுவதும் அதன் பின்னர் அவரது படுக்கையில் எழுந்தது மட்டுமே நினைவில் இருந்ததாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். பலருக்கும் தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூட நினைக்கவில்லை என்றே நீதிமன்றத்திலும் தெரிவித்தனர். ஆனால், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் வேறு ஒரு உண்மையைக் கூறுவதாக உள்ளது. தனது ரூமில் இருக்கும் கடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் பலாத்கார சம்பவத்தை அவர் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வாதம்
கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த புகார் எழுந்த போதே, போலீசார் அவரது வீட்டில் டிஎன்ஏ ஆதாரம் மற்றும் பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட ஷீட்டையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அங்கு பிரிட்ஜில் இருந்த ஒயின் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் பாட்டிலில் இரண்டு மயக்க மருந்துகள் இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இருப்பினும், அந்த பெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக பாலேஷின் வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், பெண்களுக்குப் போதை மருந்து கொடுத்ததையும், அனுமதியின்றி வீடியோ எடுத்ததையும் அவரது வழக்கறிஞர் மறுத்தார்.












Click it and Unblock the Notifications