உறவினர்களே மறுக்கும்போது.. கொரோனா சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்யும்.. தப்லீக் ஜமாத் தன்னார்வலர்கள்
திருத்தி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் முறையான இறுதிச் சடங்கைச் செய்து வருகின்றனர்.
நாட்டில் தினசரி கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள பல நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனா உயிரிழப்புகளால் மயானங்களில் உடல்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில்,ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் முறையான இறுதிச் சடங்கைச் செய்து புதைத்து வருகின்றனர்.
தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 60 தன்னார்வலர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி குறைந்தபட்சம் 15 உடல்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். உயிரிழப்பவரின் மத சடங்குகளைப் பின்பற்றியே உடல்கள் புதைக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்களே முன் மறுக்கின்றனர். இந்தச் சூழலில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் இறந்தவர்களின் உடல்களை முறையாக இறுதிச் சடங்கு செய்கின்றனர். இந்த சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவ தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் டெல்லியில் நடத்திய கூட்டம் தான் காரணம் என தொடர்ந்து செய்திகள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications