தமிழ்நாடு...கல்லூரி இறுதித்தேர்வு உண்டு...பிற பருவத்தேர்வுகள் ரத்து...முதல்வர் உத்தரவு!!
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், கல்லூரி தேர்வுகள் இதனால் பாதிக்கப்பட்டு, தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற சூழல் இன்றும் நிலவி வருகிறது. பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. தேர்வுகளை ரத்து செய்து, கடந்த கல்வி ஆண்டில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. அன்பழகன் அளித்திருந்த பேட்டியில், ''மாநிலத்தில் பல கல்லூரிகள் கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம். தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு நடைபெறும். இதுதவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்தி இருக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும். உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications