சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் வாக்களித்த மக்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மாடல் ஆட்சிக்காக மக்களின் அங்கீகாரம் இது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,601 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:
Feb 22, 2022, 9:09 pm IST
கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தல் முடிவுகள்.... பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி!
Feb 22, 2022, 8:25 pm IST
கோவையில் வரலாறு படைத்த திமுக... முதல் முறை மேயர் பதவி!
Feb 22, 2022, 8:24 pm IST
பாஜகவை தமிழக மக்கள் முழுமையாக ஏற்றுள்ளனர் - அண்ணாமலை
Feb 22, 2022, 8:24 pm IST
பாஜகவுடன் பயணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Feb 22, 2022, 8:24 pm IST
கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மூன்றாம் இடம்
வந்துள்ளது - அண்ணாமலை
Feb 22, 2022, 6:32 pm IST
கோவை தெற்கு மாவட்டத்தில் அதிமுக கோட்டையை தகர்த்து திமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது- கோவை தெற்கு திமுக பொறுப்பாளர் வரதராஜன்
Feb 22, 2022, 6:24 pm IST
தேனி: ஓபிஎஸ் தொகுதியில் மாஸ் காட்டிய திமுக..... குச்சனூர் பேரூராட்சியை கைப்பற்றியது!
Feb 22, 2022, 6:23 pm IST
ஒசூர் மாநகராட்சி 13வது வார்டில் திமுக சார்பில் மாமன்ற உறப்பினராக வெற்றி பெற்ற சட்டக்கல்லுரி மாணவி யஷாஸ்வினி; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதி!
பெண்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்குவதுதான் நமது குறிக்கோள் - ஸ்டாலின்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஸ்டாலின்.
வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடவேண்டாம் என ஸ்டாலின் கோரிக்கை.
உங்கள் மீது எந்த புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்
நான் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருப்பேன் - ஸ்டாலின்
Feb 22, 2022, 4:44 pm IST
வாணியம்பாடி நகராட்சி 19-வது வார்டில்
திமுக, அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் நஃபிலா வெற்றி
Feb 22, 2022, 4:43 pm IST
தேர்தலில் தோல்வி - விஷம் குடித்து தற்கொலை!
Feb 22, 2022, 4:40 pm IST
ஈரோடு: மீண்டும் ஒத்த ஓட்டு... ட்ரெண்டிங்கில் பாஜக.... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
Feb 22, 2022, 4:37 pm IST
மாநகராட்சி 7; நகராட்சிகள் 49; பேரூராட்சிகள் 224-ல் பாஜக வெற்றி
திமுக கூட்டணியின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
Feb 22, 2022, 4:20 pm IST
TNLocalBodyElection தஞ்சை: ஒரத்தநாடு பேரூராட்சி அமமுக வசம்… ஆட்டம், பாட்டத்துடன் தொண்டர்கள் மகிழ்ச்சி!
Feb 22, 2022, 4:19 pm IST
பாமக கோட்டையை தகர்த்த திமுக
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி, பி.மல்லாபுரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக
Feb 22, 2022, 4:18 pm IST
நெல்லை
நெல்லையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
Feb 22, 2022, 4:15 pm IST
மீஞ்சூர் பேரூராட்சி
மீஞ்சூர் பேரூராட்சியில் 3-வது வார்டு பாஜக வேட்பாளர் சரளாவுக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தது
Feb 22, 2022, 4:15 pm IST
திருப்பத்தூர்
திருப்பத்தூர் : வாணியம்பாடி நகராட்சி 19-வது வார்டில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் நபிலா வெற்றி
Feb 22, 2022, 3:47 pm IST
TNLocalBodyElection ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்… மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் ஷாக்!
Feb 22, 2022, 3:41 pm IST
53 ஆண்டுகளுக்கு பின் பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக 21-ல் வெற்றி
Feb 22, 2022, 3:41 pm IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022 LIVE:மாநகராட்சி 2;நகராட்சி 32;பேரூராட்சி67ல் அமமுக வெற்றி
Feb 22, 2022, 3:40 pm IST
சேலம் : தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளில் பாமக வெற்றி சேலம் : இடங்கணசாலை நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி திருவண்ணாமலை (மேற்கு) செங்கம் பேரூராட்சி 18-வது வார்டு பாமக வெற்றி.
மாநகராட்சி- 2
நகராட்சி- 32
பேரூராட்சி 67
என மொத்தம் 101 வார்டுகளில் வெற்றி
READ MORE
6:34 AM, 22 Feb
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்றது
6:34 AM, 22 Feb
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது
6:34 AM, 22 Feb
21 மாநகராட்சிகளில் 1,369 வார்டுகள்; நகராட்சிகளில் 3,824 வார்டுகள், பேரூராட்சிகளில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு தேர்தல்
6:34 AM, 22 Feb
12,601 வார்டுகளுக்கான தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர்
6:35 AM, 22 Feb
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின
6:35 AM, 22 Feb
வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன் உள்ளிட்டவை எடுத்து செல்ல தடை
6:35 AM, 22 Feb
வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளர்கள், முகவர்களுக்கு மட்டுமே அனுமதி
6:35 AM, 22 Feb
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வார்டுகள் வாரிய வாக்குகள் எண்ணப்படும்
6:35 AM, 22 Feb
தமிழகம் முழுவதும் மொத்தம் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
6:35 AM, 22 Feb
வாக்குப் பதிவு மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
6:35 AM, 22 Feb
முறைகேடு புகார்கள் எழுந்ததால் 4 மாவட்டங்களில் 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது
6:36 AM, 22 Feb
ஸ்ட்ராங் ரூம் அதாவது பாதுகாப்பு அறையில் வார்டு வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன
6:36 AM, 22 Feb
வாக்கு எண்ணும் மையங்கலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தனித்தனி ஏற்பாடுகள்
6:36 AM, 22 Feb
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்
6:36 AM, 22 Feb
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன
6:44 AM, 22 Feb
இன்று மாலை 3 மணிக்குள் பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்
6:45 AM, 22 Feb
இன்று காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு
6:45 AM, 22 Feb
பேரூராட்சி வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை ஒன்று அல்லது 2 சுற்றுகள் நடைபெறும்
6:45 AM, 22 Feb
நகராட்சி, மாநகராட்சிகளில் அதிகபட்சம் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
6:45 AM, 22 Feb
ஒரே நேரத்தில் 14 வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளில் வைக்கப்படும்
6:46 AM, 22 Feb
தபால் வாக்குகள் எண்ணிக்கை அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் முடியக் கூடும்
6:50 AM, 22 Feb
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்
6:55 AM, 22 Feb
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் அனைத்து மதுக்கடைகளும் இன்று மூடல்
6:55 AM, 22 Feb
சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
6:56 AM, 22 Feb
வாக்கு எண்ணும் பணிகள் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்