யப்பா! சீர்காழியில் 3 மணி நேரத்தில் கொட்டிய 20 செ.மீ. மழை.. மேகவெடிப்புதான்.. தமிழ்நாடு வெதர்மேன்
மயிலாடுதுறை: சீர்காழியில் காற்றழுத்தம் தீவிரமடைந்ததால் மழை பெய்துள்ள போதிலும் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளதால் இதை மேக வெடிப்பு மழை என்றே கூறலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் அதிக மழை பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 161.மி.மீ மழை பெய்துள்ளது. சீர்காழியில் அதிகபட்சமாக 43 செ.மீ. மழை பெய்துள்ளது.

கொள்ளிடம்
அது போல் கொள்ளிடத்தில் 31 செ.மீ. மழையும் செம்பனார்கோவில் பகுதியில் 24 செ.மீ. மழையும் பொறையாறு பகுதியில் 18 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில்30 செ.மீ. மழை பெய்துள்ளது. சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

செல்போன் சேவை
செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அது போல் தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அலை உப்பளம் வழியாக மீனவ கிராமங்களுக்குள் புகுந்தது.

தேனிஷ் கோட்டை
தேனிஷ் கோட்டையை சுற்றியும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அது போல் சீர்காழியில் புகழ் பெற்ற சட்டநாதர் கோயில் பிரகாரத்தை சுற்றிலும் இடுப்பளவு வெள்ளநீர் புகுந்துள்ளது. இதை மோட்டார் மூலம் அகற்றலாம் என்றால் அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் இருப்பதால் அந்த முயற்சியை கோயில் நிர்வாகம் கைவிட்டது.

இரண்டு அல்லது மூன்று நாட்கள்
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த மழைநீர் வெளியேற்றப்படும். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில்: மயிலாடுதுறை மாவட்டத்தை சுற்றிலும் மேகக் கூட்டங்கள் நீண்ட நேரமாக குவிந்து கிடப்பதால் அதி கனமழை பெய்து வருவதாக நேற்றைய பதிவில் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

550 மி.மீ.
சீர்காழி மழையானது மேகவெடிப்பு என சிலர் கூறி வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் கேட்ட போது சீர்காழி மாவட்டத்தில் காற்றழுத்தத்தின் மையப்பகுதி ண்ட நேரமாக நின்றுவிட்டதால் அதிக அளவு மழை பெய்தது. 3 மணி நேரத்தில் 200 மி.மீ (20 செ.மீ.) மழை பெய்துள்ளது. எனவே இந்த மழையை மேக வெடிப்பு என கூறலாம். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications