2வது நாளாக சென்னையில் இன்று 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த 11ம் தேதி முதல் கடலில் கரைத்து வருகின்றனர்.
சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 14, 15, 16 மற்றும் 18ம் ஆகிய தேதிகளில் கடலில் கரைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் எடைமேடை, கார்போரைட் யுனிவர்செல் நிறுவனத்தின் பின்புறம் இருக்கும் கடற்கரை, எண்ணூர் ராமச்சந்திரா நகர் என மொத்தம் 6 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

சிவசேனா கட்சி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. மேலும் இன்று 2வது நாளாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி அமைப்பினர் இன்று விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர்.
திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் பேட்டையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் 1,400 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நகரில் பாதுகாப்பு பணியில் 15,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் பட்டினப்பாக்கத்தில் அதிகமான சிலைகள் கரைக்கப்படுவதால் அங்கு புறக்காவல் நிலையம், மின் கட்டுப்பாட்டு அறை, 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து இந்த முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ் தாஸ், இணை கமிஷனர்கள் சண்முகவேல், சங்கர், ஸ்ரீதர், திருஞானம் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டனர். பட்டினப்பாக்கத்தில் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம்












Click it and Unblock the Notifications